இராணிப்பேட்டை மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான NDA கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்!
இராணிப்பேட்டை, மார்ச் 10-இராணிப்பேட்டை மாவட்டம்,
ஆற்காடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான NDA கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி
பேசியதாவது:
ஆளும் திமுக, மத்திய அரசிடம் இணக்கத்தில் இல்லாததனால் தமிழகத்தின் வளர்ச்சியானது மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இப்பொழுது உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னால் இங்கு 15 முதலமைச்சர்கள் நாட்டை ஆண்டுள்ளனர். ஆனால் அவர்கள் 15 பேரும் சேர்ந்து 4 லட்சம் கோடி மட்டுமே தமிழகத்தின் மீது கடனை வைத்திருந்தனர்.
ஆனால் இப்பொழுது உள்ள ஸ்டாலின் அரசு, 6 லட்சம் கோடி ரூபாய் கடனை தமிழ்நாட்டுக்கு வைத்து தமிழகத்தை பரிதாபமான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் உங்கள் பாச்சா இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பலிக்காது. மக்கள் விழிப்புடன் உள்ளார்கள். நிச்சயம் தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமையும் என்பது உறுதி என்று கூறி உரையை நிறைவு செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் NDA கூட்டணி கட்சி நிர்வாகிகள் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.