இராமநாதபுரத்தில் திறனகம் பயிற்சி மையம்!
இராமநாதபுரம், மார்ச். 04-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டும் மையம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான "திறனகம்" பயிற்சி மையத்தை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்ததையொட்டி,
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகம் பயிற்சி மையத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கேற்றி வைத்து தொழில்திறன் பயிற்சி மூலம் தையல் பயிற்சி பெற்ற மாணவியர்களுக்கு பயிற்சி சான்றிதழை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்கள் சுஸ்மிதா லுட்ஸ், நாகரெத்தினம், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.