விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம், மார்ச்.04-
தமிழ்நாடு 43 வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் மே 5-ம் தேதி வணிகர் தினத்தன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடர்பான பேரமைப்பின் கடலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மண்டலத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்டத்தலைவர் ராமகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பேரமைப்பின் மாநிலப்பொதுச்செயலர் கோவிந்தராஜூலு, மாநிலப் பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில செய்தித் தொடர்பாளர் பாண்டியராஜன், கடலூர் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் தொழிலதிபர் G.R.துரைராஜ், மாவட்டச் செயலர்கள் பாஸ்கர் (திருவண்ணாமலை), முத்து (கள்ளக்குறிச்சி), ரவிச்சந்திரன் (விருத்தாச்சலம்) மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
முன்னதாக பேரமைப்பின் விழுப்புரம் மாவட்டச்செயலர் முகமது அக்பர் அலி வரவேற்றார். நிறைவில் விழுப்புரம் மாவட்டப் பொருளாளர் நிர்மல் நன்றி கூறினார். மாவட்டத்துணைத் தலைவர் புதுராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.