இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு பூமி பூஜை
புதுச்சேரி, மார்ச் 06-
புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் தொகுதி, தட்சிணாமூர்த்தி நகரில் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு ரூ. 46.95 கோடி அரசாணை பெறப்பட்டு, முதல் கட்டமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக கட்டிடத் தொகுதி மற்றும் கல்லூரி வளாகத்தை மேம்படுத்துவதற்காகவும் ரூ. 13.72 கோடி மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டது.
இந்த வேலையை துவங்கும் முகமாக இன்று (05.03.2026) காலை 9:30 மணியளவில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில், கல்வித்துறை அமைச்சர் A.நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் கே. லட்சுமிநாராயணன், கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி.@ எஸ். ரமேஷ் முன்னிலையில் இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநர் ஏ. எஸ். சிவக்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கே. வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர்-2 ஆர். சுந்தரமூர்த்தி, இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கிஷோர் கே. ஜான், சிறப்பு கட்டிடம் கோட்டம்-II செயற்பொறியாளர் எஸ். பக்தவச்சலம், உதவி பொறியாளர் பி. வேல்முருகன், இளநிலைப் பொறியாளர் கே. திவாகர் நீலகண்டன், பேராசிரியர்கள், பேராசிரியைகளும், கட்டிட ஒப்பந்ததாரர் A.T. இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர், கல்லூரி மாணவ, மாணவிகள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.