புதுச்சேரி வைத்திக்குப்பம் மீனவர்களுடன் இலங்கை தென்னிந்திய இணை தூதர் தொண்டைமான் கேஜீஸ்வரன் மீனவர்கள் பாதுகாப்பு வாழ்வாதாரம் மற்றும் கடல்சார் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை!
புதுச்சேரி வைத்திக்குப்பம் மீனவர்களுடன் இலங்கை தென்னிந்திய இணை தூதர் தொண்டைமான் கேஜீஸ்வரன் மீனவர்கள் பாதுகாப்பு வாழ்வாதாரம் மற்றும் கடல்சார் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
புதுச்சேரி, மார்ச் 30-புதுச்சேரி, வைத்திக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களை நேரில் சந்தித்த இலங்கை தென்னிந்திய இணை தூதர் தொண்டைமான் கேஜீஸ்வரன், மீனவர்கள் பாதுகாப்பு வாழ்வாதாரம் மற்றும் கடல்சார் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர். குறிப்பாக, கடலில் வழி தவறும் மீனவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், கடல்சார் பாதுகாப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் எல்லை தொடர்பான சிக்கல்கள் குறித்து தீர்வு காண வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் ராஜ்பவன் தொகுதி பாஜக சட்டமன்ற வேட்பாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.