கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 
கடலூர், மார்ச் 17-கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று (17.03.2026) மஞ்சக்குப்பம் அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்றது.
     இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கலந்து கொண்டு பேசியதாவது:       
     தகுதி இல்லாத, திறமை இல்லாத ஸ்டாலின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஸ்டாலினுக்கு  முதலமைச்சராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. எதற்கு இந்த பதவி உங்களுக்கு? இதை தமிழ்நாட்டுப் பெண்கள் கேட்க  வேண்டும். இந்த ஆட்சி போன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை இதுவரை தமிழ்நாட்டில் யாரும் பார்த்ததே கிடையாது. மூன்று பெண்களுக்கு தந்தையாக நான் சொல்கின்றேன். தயவுசெய்து திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்காதீர்கள்.

       தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது  என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  தெரியாது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஐந்து கொலைகள் நடக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில்  7832 கொலைகள் இதுவரை   நடந்துள்ளது. இதில் 1973 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 361 குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் 38 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 
       தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் இனியும்  பொறுமையாக  இருக்கக் கூடாது. இவர்கள் இந்த தமிழ்நாட்டை ஆட்சி செய்யவே தகுதியற்றவர்கள். பெண்களுக்கு எதிராக இந்த ஆட்சியில் 44 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன. அதில் 2021 பெண்களை வன்கொடுமை செய்த பாலியல் வழக்குகள். பெண்களுக்கு  பாதுகாப்பு வழங்க முடியாத உங்களுக்கு ஆட்சி ஒரு கேடா. கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் 27 ஆயிரம் வழக்குகள் போஸ்கோ வழக்குகள். இந்த குற்றங்களுக்கு எல்லாம் என்ன காரணம் தெரியுமா?    
       முதல் காரணம் கையாலாகாத முதலமைச்சர். இரண்டாவது காரணம் தமிழ்நாட்டில் ஆறாக ஓடும் சாராயம், டாஸ்மார்க் சாராயம், போதை வஸ்துக்கள். .தமிழ்நாட்டில் 4700 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 1500 கிளப் உள்ளது. இந்த கிளப்புகளில் எப்பொழுது வேண்டுமானாலும் மதுபானங்கள் விற்கப்படும். டாஸ்மாக் சாராயத்தை கள்ளச் சந்தையில் விற்கும் 25 ஆயிரம் கடைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதன் மொத்த வருமானம் முழுவதும் ஸ்டாலினுக்கும் அவர் குடும்பத்திற்கும் தான் செல்கிறது. கஞ்சா குடிக்கும் மனிதன் மிருகமாக மாறிவிடுகிறான் அவன் என்ன செய்கிறான் என்பதே அவனுக்கு தெரியாது. இந்த சூழ்நிலைக்கு யார் காரணம். கேடுகெட்ட விடியா  திமுக அரசு தான் காரணம்.
ஸ்டாலின் தினமும் விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். போட்டோ ஷூட் ஆட்சிதான்  தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. ஸ்டாலின் சொல்கிறார். தமிழ்நாடு ஒளிர்கிறது, மிளிர்கிறது என்று. எங்கே ஒளிர்கிறது மிளிர்கிறது. ஒழிந்து கொண்டுதான் இருக்கின்றது. திமுக அரசில் அமைச்சர் என்ற பெயரில் ஸ்டாலினை சுற்றி  நான்கு வியாபாரிகள் இருக்கின்றார்கள். கமிஷன் கலெக்க்ஷன், கரெப்க்ஷன். இதைத்  தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. கொள்ளையடித்து வைத்திருக்கின்றார்கள். அந்த பணத்தை கொடுத்தால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.     
         ஒருங்கிணைந்த தென்னாற்காடு  மாவட்டம் எனது சொந்த மண். இந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இது போன்ற ஒரு மோசடி ஆட்சியை யாரும் நடத்தி இருக்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் திமுக அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து இருக்கின்றது. கடந்த வாரம் தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது  குழந்தையை திமுக நிர்வாகி ஒருவர்  பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்யும் மனநிலைமையை தமிழ்நாட்டு  இளைஞர்களிடம் உருவாக்கிய ஸ்டாலினை தமிழ்நாடு மக்களும், எந்த பெற்றோரும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கவும் கூடாது. கையாலாகாத ஒரு முதல்வர், தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பதால் தான் தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின், ஹெராயின், பிரவுன்சுகர் போன்ற போதை பொருட்கள் தமிழகத்தில் தங்கு தடையின்றி ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் கேட்கின்றோம் இதையெல்லாம் கட்டுப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். 
    தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குங்கள் என்று. இந்த ஆண்டில் தமிழ்நாட்டில்   3680 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். நமக்கு சோறு போடும் விவசாயிகள் நமக்கு கடவுள். அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் ஸ்டாலினே  நீ எதற்கு ஆட்சி செய்கிறாய்.       
          கொள்ளையடிப்பதற்கு ஒரு ஆட்சியா? சட்டம் ஒழுங்கு என்று எதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பணம்,பணம், பணம்  அவர்களுக்கு பணம் தான் முக்கியம். மணல் கொள்ளை, மலை கொள்ளை, மரம் கொள்ளை, நகராட்சியில் வேலையா அதிலும் கொள்ளை.  டாஸ்மாக்கில்  கொள்ளையோ கொள்ளை. அனைத்து துறைகளிலும் கொள்ளையோ கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடி ரூபாய் திமுக கொள்ளை அடித்து இருக்கின்றது.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் திமுக வாங்கி இருக்கின்றது இவ்ளோ கடன் வாங்கி என்ன செய்தீர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தீர்களா. நலத்திட்டங்கள் ஏதாவது வழங்கினீர்களா. ஏதுமில்லை. இதெல்லாம் ஒரு நிர்வாகமா இதை தூக்கி எறிய வேண்டும். தேர்தலுக்கு முன்பாக 505 வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக வெறும் 66 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றி இருக்கின்றது. இது வெறும் 13 சதவீதம் மட்டும் தான். பள்ளித் தேர்வு எழுதும் மாணவர்கள் 35 மார்க் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும். இவர்கள் 35 சதவீதம் கூட தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றவில்லை. இது ஃபெயிலான ஆட்சி. தகுதியற்ற ஆட்சி. எனவே மக்கள் இதை தூக்கி எறிய வேண்டும்.
        கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இருந்து இரண்டு பள்ளி மாணவர்கள் முதலமைச்சரை சந்தித்த வீடியோவை நாம் பார்த்தோம். அது ஒரு போட்டோ சூட்.  அந்த மாணவர்கள் மருத்துவராக வேண்டும், கலெக்டராக வேண்டும் என்று நீங்கள் அந்த மாணவர்களிடம்  கூறினீர்கள்.  அதற்கு முதலில் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியரை கொடுங்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் இல்லை. இதையெல்லாம் சிந்தித்து நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதை அரசியலுக்கு என்று சொல்வதை விட இது நமது ஒவ்வொருவருடைய கடமை.
 பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும். பெண்களை  நம் குல சாமி. உலக அளவில் அதிக பெண் தெய்வங்கள் உள்ள நாடு தமிழ்நாடு. நமது நாட்டில் உள்ள ஆறுகளுக்கெல்லாம் நர்மதா, கங்கா, காவேரி என பெண் பெயரை வைத்து பெண்களை போற்றி பாதுகாத்த நாடு. அப்படி பட்ட நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க துப்பில்லாத ஸ்டாலினின் ஆட்சியை தூக்கி எறிந்து  தமிழ்நாட்டை மீட்டெடுப்போம். புதிய ஆட்சியை  அமைப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நாம் மாபெரும் வெற்றி பெற செய்து எடப்பாடியாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
       கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்,  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
        
நன்றி... கடலூர் செய்தியாளர்கள் குழு..