உலக சிறுநீரக தினம்: தமிழ்நாட்டில் அப்போலோ டயாலிசிஸ் – தெற்கு ரயில்வே இணைந்து விழிப்புணர்வு இயக்கம்
சென்னை, மார்ச் 16, 2026: உலக சிறுநீரக தினம் 2026 முன்னிட்டு அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்குகள் தமிழ்நாட்டில் உள்ள தனது 33 கிளினிக்குகள் முழுவதும் சிறுநீரக ஆரோக்கியம் குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தியது.
“முன்கூட்டியே பரிசோதியுங்கள்; ஆரோக்கியமாக வாழுங்கள்” என்ற செய்தி மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த முயற்சி, சிறுநீரக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் பரிசோதனைகள் அவசியத்தையும், தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மத்திய மருத்துவமனையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னணி மருத்துவர்கள் சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் வழக்கமான சுகாதார பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், நீடித்த சிறுநீரக நோயுடன் வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அனுபவங்கள் பகிரப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்குகள் தலைமை இயக்க அதிகாரி திரு. எம். சுதாகர் ராவ், “சிறுநீரக நோய் பெரும்பாலும் ஆரம்ப அறிகுறிகளின்றி உருவாகிறது. எனவே வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மிகவும் அவசியம்.
இந்தியா முழுவதும் 175-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் மற்றும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட டயாலிசிஸ் அமர்வுகளின், தரமான சிறுநீரக பராமரிப்பு அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.