வேலூர் மாவட்டம், தேவநேயப் பாவாணர் தமிழ் மன்றம் முதுகலை தமிழாய்வுத்துறை சார்பில், வேலூர் ஊரீசு கல்லூரி காபு அரங்கத்தில், முத்தமிழ் கலை விழா ஊரீசு கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் ஜெ. ஆனி கமலா ஃப்ளாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மன்ற தலைவர் இந்திரா வரவேற்புரையாற்றினார் தமிழ் துறை தலைவர் அ.ஜோ. தியோடர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். திரைப்பட பாடலாசிரியர் எழுத்தாளர் கவிஞர் யுகபாரதி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் மன்ற செயலாளர் வேதவல்லி நன்றியுரையாற்றினார். இதில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.