புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை திரும்ப பெற்று தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்த வேண்டுமென்று நமது மக்கள் கழக நிறுவனத் தலைவர் நேரு கோரிக்கை!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை  திரும்ப பெற்று தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்த வேண்டுமென்று நமது மக்கள் கழக நிறுவனத் தலைவர் நேரு கோரிக்கை!

புதுச்சேரி, மார்ச் 19-
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களும், வேட்பாளர்களும் சிந்திக்க கூட நேரமில்லாத வகையில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற்று தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நமது மக்கள் கழக நிறுவனத் தலைவர் நேரு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: 
        புதுச்சேரி உப்பனாற்று பாலம் கடந்த 18 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் ஆற்றின் ஓரம் கட்டுமானப் பணி என்ற பெயரில் இரு பக்கமும் சுவர்கள் கட்டப்பட்டு வருவதால் ஆற்றின் ஓரம் உள்ள வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இவர்களுக்கு பாதிப்புகள் பொறுத்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அவர் தன் தொகுதியில் பல வருடமாக இந்த பணி நடைபெற்று வருவதால் தனக்கு தொகுதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அரசின் செயல்பாடு உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். 
         ரூ.28 கோடியில் டெண்டர் விடப்பட்டு தொடங்கப்பட்ட பாலம் கட்டுமானப் பணி தற்போது 100 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் இதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளதாக தெரிவித்தவர் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். 
         சட்டமன்றத் தேர்தல் தேதி அவசரகதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.  வாக்காளர்களுக்கு  வாக்களிக்கவும்,  வேட்பாளர்களுக்கு போட்டியிடுவது குறித்து சிந்திக்கவும் கொஞ்சம் கூட நேரம் தராமல் அவசரகதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ரத்து செய்துவிட்டு தமிழகத்துடன் சேர்ந்து புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் நேரு  கோரிக்கை விடுத்தார். 
    தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து ஒரு சில தொகுதிகளில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளதாக தெரிவித்த நேரு,  தொடர்ந்து மக்கள் பணி மீதும், மாநில வளர்ச்சி மீதும் அக்கறை செலுத்தி தேர்தல் பணிகளை அதற்கு தகுந்தாற்போல்  முன்னெடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.