திண்டுக்கல் நிலக்கோட்டை
அரசு பெண்கள் கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு பயிலரங்கத்தில்
ஆசிரியராய் மாறி விழிப்புணர்வு வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன்!
திண்டுக்கல், பிப்.09- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் பொருளாதார துறை மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு அரசு மனித உரிமை ஆணைய செயலாளர் இரா.கண்ணன் ஐ.ஏ.எஸ்., வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கினார். இதில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள் கலந்துரையாடலின் போது கேட்ட கேள்விகளுக்கு அவர்களில் ஒருவராய் இருந்து பதில் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உயர்பதவியில் இருப்பவர்கள் இப்படியும் எளிமையாக இருப்பார்களா! என்று விழாவில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் வியந்தனர் இந்நிகழ்வு சிறப்புற உழைத்த நிலவை அகாடமி நிர்வாகி சாதிக், நிலவை பவுண்டேசன் அமிர்தலிங்கம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Comments
Post a Comment