சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லூரியின் ஆண்டு விழா!

சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லூரியின் ஆண்டு விழா 
சேலம், பிப். 28-
சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று (27.02.2026) நடைபெற்றது. 
         இந்த விழாவிற்கு நாலெட்ஜ் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கல்லூரியின் செயல் தலைவர் முனைவர் பி.எஸ்.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சென்னையை சேர்ந்த காக்னிசன்ட் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் இணை இயக்குநர்  ரோபியா ரோஸ், சேலம் கிளாசிக் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தாளாளர் முனைவர் டி.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான விருதுகளை வழங்கி பாராட்டினர்.
      நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.விசாகவேல் ஏ.ஸ்டீபன் மேலாண்மை துறையின் ஆண்டு அறிக்கையும் வாசித்தனர். ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
        பின்னர் மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் ஜே.குமார் பொருளாளர்,
வி.சுரேஷ்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குநர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.