திருவண்ணாமலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கம்
திருவண்ணாமலை, பிப். 10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து உணவுகளை பரிமாறினார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் சீர்மிகு நல்லாட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
நம் நாட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்து சுற்றுசூழலையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் தூய்மை பணியார்களின் சேவையையும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தின் கீழ் உணவுகளை பரிமாறி அவர்களோடு அமர்ந்து உணவருந்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment