வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டுமென தருமபுரியில் சௌமியா அன்புமணி பேச்சு!
வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணிக்கு ஆதரவு தர வேண்டுமென தருமபுரியில்
சௌமியா அன்புமணி பேச்சு!
தருமபுரி, பிப். 10-
பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி, சிங்கப் பெண்ணே எழுந்து வா...
என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தருமபுரி மாவட்டம் முழுவதும் சென்று வந்ததை நினைவு கூர்ந்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணிக்கு வெற்றியை கொடுத்த மாவட்டம் தருமபுரி மாவட்டம். தருமபுரி மாவட்டத்தில் நாலரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அவற்றில் பாதி நீர் பாசன நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. விவசாயம் செழிக்க காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதனை செயல்படுத்த ரூ.650 கோடி ஒதுக்க தமிழக அரசு மறுக்கிறது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீரை தருமபுரி மாவட்டத்திற்கு பெற்றுத் தந்தது பாமக தான் என நினைவு கூர்ந்தார். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தி நீண்ட வருடங்கள் ஆகியும் இதுவரை சிப்காட் தொழிற்சாலைகள் தருமபுரிக்கு வரவில்லை என குற்றம் சாட்டினார். மற்ற மாவட்டங்கள் 20% வளர்ச்சியில் உள்ளது.ஆனால் தருமபுரி மாவட்டம் 8 சதவீத வளர்ச்சி மட்டுமே உள்ளது. 108 ஆம்புலன்ஸ், தருமபுரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி, தருமபுரி மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது என பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் அன்புமணி.
தமிழகம் கஞ்சா, மது புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டது. வருங்கால தலைமுறையை காக்க பெண்கள் அனைவரும் அன்புமணி பின்னால் வாருங்கள் இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Post a Comment