காட்பாடியில் ஊதிய உயர்வு வழங்க கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

காட்பாடியில் 
ஊதிய உயர்வு வழங்க கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

     வேலூர், பிப்.27-வேலூர் மாவட்டம்,  மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலூர் மேற்பார்வை பொறியாளர் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
01.12.2023-முதல் கிளாஸ் 3, 4  பணியாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வுக்கான முன்மொழிவை கடந்த  25ம் தேதி தொழிற்சங்கங்களுக்கு மின் வாரியம் வழங்கியது. கிளாஸ் 1, 2 சர்வீஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கான முன்மொழிவை வழங்காததுடன் தமிழக அரசின் அனுமதி கேட்டுள்ளதாக கூறவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    
        ஆர்ப்பாட்டத்திற்கு  கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்
ச.சுப்பிரமணியன்  தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் மு.கோவிந்தராஜ், மாநில இணைச் செயலாளர் பா.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தருமன், சுந்தரம்,  சின்னதுரை,  தனசேகர்,  வினாயகம்,  அருள்ஜோதி, குமார், சுந்தரராஜன், சிவா,  பாலாஜி ஆகியோர்  பேசினர்.
     ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.