புதுச்சேரியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்ற வில்லியனூர் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபக் கட்டுமான பணிகளுக்கான துவக்க விழா!
வில்லியனூரில் ரூ. 7.40 கோடி மதிப்பீட்டில்
கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிகளை
முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பு
புதுச்சேரி, பிப்.11-
வில்லியனூரில் ரூ. 7.40 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டும் வசதியுடன் கூடிய கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று (11.02.2026) அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, வில்லியனூரில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்த கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் சிதலமடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் இருந்ததை இடித்துவிட்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் தொடர் முயற்சியின் காரணமாக ரூ. 7.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட புதிய திருமண மண்டபம் கட்டுமான பணி பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 10.00 மணிக்கு நடந்தது.
வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.
விழாவில், முதல்வர் என். ரங்கசாமி, கலந்து கொண்டு, புதிய கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிக்கு பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். அதேபோன்று முதியோர் உதவித் தொகைக்கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் வைத்தியநாதன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஜலீல், இளநிலைப் பொறியாளர் அருண்ஆனந்த் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னாள் சேர்மன் பாலமுருகன், வட்டார காங்கிரஸ் ராஜ்குமார், முருகையன், திமுக முன்னோடிகள் மண்ணாங்கட்டி, சுப்புராயலு, கலியபெருமாள், சேகர், லட்சுமணன், சுபமங்கலம் பாபு, முகுந்தன், பிரேம், ஆனந்த், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால் ஹனீப், வர்த்தகர் அணி ரமணன், இலக்கிய அணி சீனு. மோகன்தாசு, விவசாய அணி குலசேகரன், ஆதிதிராவிடர் அணி செல்வநாதன், சிறுபான்மையினர் அணி முகம்மது ஹாலித், தொமுச அங்காளன், துணை அமைப்பாளர்கள் சரவணன், ராமதாஸ், கோபி, காசிநாதன், காளி, துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கர் சுப்ரமணி, ஏழுமலை, கிளைக் கழக நிர்வாகிகள் ராஜ், சபரிநாதன், ஜனா, ரவி, வேதாச்சலம், ரஜினிமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment