தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து முடிக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கேள்வி?
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து முடிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கேள்வி
வேலூர், பிப்.07-
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து முடிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு மாநிலத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் விரைந்து முடிக்க ஒன்றிய அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா? அப்படியானால் அதன் விவரங்கள் யாவை?
தமிழ்நாட்டில், குறிப்பாக வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுவதற்காக , கடந்த நான்கு ஆண்டுகளில் ஆண்டு வாரியாக அனுமதிக்கப்பட்ட, வழங்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த தொகை விவரம் தருக?
சென்னை, பெங்களூர் மற்றும் வேலூரை இணைக்கும் NH-40 வழியாக அணுகல் - கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைக்கான ரூ.1,338 கோடி நெடுஞ்சாலைத் திட்டம் விரைவுபடுத்த ஒன்றிய அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் யாவை?
ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் ஜெயராம் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம் வருமாறு:
இன்று வரை தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை (NH) திட்டங்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு வழிப்பாதை அமைக்க 29 பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவு விவரங்கள் வருமாறு:
2022-2023 ஆம் ஆண்டு ரூ.8094 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 7412 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் ரூ.134 கோடி செலவு செய்யப்பட்டது.
2023-24ஆம் ஆண்டு ரூ.12,009 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 8150 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் ரூ135 கோடி செலவு செய்யப்பட்டது.
2024-2025 ஆம் ஆண்டு ரூ.14242 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ. 6572 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் ரூ. 82 கோடி செலவு செய்யப்பட்டது.
2025-26 ஆம் ஆண்டு (27.01.2026 வரை) ரூ.14517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 5472 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் ரூபாய் 45 கோடி செலவு செய்யப்பட்டது. 27.01.2026 வரை மொத்தம் ரூ.48862 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூ.27606 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் ரூ.396 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை(NH) திட்டங்களை செயல்படுத்தும் முகமைகள், மாநில அரசுகள், ஒப்பந்தத்தாரர்கள்/ டெவலப்பர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் அரசாங்கம் தீர்மான கண்காணிக்கிறது. பிரச்சனைகள் தீர்க்கவும், முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், பல்வேறு நிலையில் அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக திட்ட தாமதங்களை தவிர்க்க அல்லது குறைக்க ஒன்றிய அரசாக பல முயற்சிகள் எடுத்துள்ளது.
வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு, ஆந்திர பிரதேச எல்லை வரையிலான 28.02 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.1338.14 கோடி செலவில் நடைபாதை விரிவுகள் கூடிய 4 வழிப்பாதையின் அணுகல் கட்டுப்பாட்டு நெடுஞ்சாலையின் பணி 24.01.2025 அன்று ஹைபிரியில் வழங்கப்பட்டது. திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட தேதி 30.09.2025 அன்று அறிவிக்கப்பட்டு 29.09.2027 முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 28.02 கிலோ மீட்டர்களில், 25.52 கிலோமீட்டர் (91%) க்கான வில்லங்கம் இல்லாத நிலம் சலுகையாளருக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 2.50 கிமீ நீளத்திற்கு இழப்பீடு வழங்க பணி நடந்து வருகிறது. வேலையில் முன்னேற்றம் உள்ளது. இதில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள், ரயில்வே / ரோடு ஓவர் பிரிட்ஜ்கள்/ ரோடு அண்டர் பிரிட்ஜ்களின் ( ROBs/RUBs) பொது ஏற்பாடு வரைபடங்களுக்கு (GAD) ஆன்லைன் ஒப்புதல் ஆகிய தொடர் பணிகள் அனைத்தும் வழக்கமான அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது என்று அமைச்சர் தனது பதிலில் கூறினார்.
Comments
Post a Comment