ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மேலாண்மைத் துறை சார்பில்
"எம்போரியா-2026"
ஈரோடு, பிப்.10-ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பாக மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக மூன்று நாட்கள் கொண்ட கண்காட்சி "எம்போரியா 2026" என்கிற தலைப்பில் நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட அரங்குகளை தலைவர் வி.சண்முகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பின்னர், நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.மனோகரன் மற்றும் நிர்வாக அலுவலர் முனைவர். வி. சி. சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகளை ஈரோடு சுற்று வட்டார கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், நந்தா உறுப்பு கல்லூரிகளின் அனைத்து துறையினை சார்ந்த மாணவர்கள் சுமார் 7500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பார்வையிட்டு சென்றார்கள். அப்போது நடத்தப்பட்ட அறிவுத்திறன் சார்ந்த வேடிக்கை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். நிறைவாக மேலாண்மைத்துறைத் தலைவர் முனைவர், ப.மோகன்ராஜ் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி ஆகியோர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
Comments
Post a Comment