t es ad t


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.1.2026 தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகிறது. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி தோல்வி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 31.12.2025 அன்றைய நிலையில் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு வேலை வாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.3.2026 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும் இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நதி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது அல்லது https://emloymentexhange tn.gov.in என்ற இணைய தளம் முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்படுத்த அவர்கள் மீள விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவார்கள். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. 

1.1.2026 உடன் தொடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 31.3.2026 ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments