வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
வேலூர், ஜன. 20-
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிஎம்சி மருத்துவமனை மற்றும் போக்குவரத்து அலுவலகம் இணைந்து ஓட்டுனர், நடத்துனர் பொது மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. இதனை போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் சிஎம்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பிரஷர், கிட்டப்பார்வை, தூரப்பார்வை பார்வை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் ஓட்டுநர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் 300 பேர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment