வேலூர் ஆக்சிலியம் கல்லூரியில் (தன்னாட்சி) இளம் கண்டுபிடிப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய மாநில அளவிலான அனைத்து கல்லூரிகளுக்கிடையேயான கலை மற்றும் அறிவியல் கண்காட்சிப் போட்டி!
வேலூர் ஆக்சிலியம் கல்லூரியில் (தன்னாட்சி) இளம் கண்டுபிடிப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய மாநில அளவிலான அனைத்து கல்லூரிகளுக்கிடையே கலை மற்றும் அறிவியல் கண்காட்சிப் போட்டி
வேலூர், ஜன.29-
வேலூர் மாவட்டம், வேலூர் ஆக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி), அக்சிலியம் கல்லூரி ஆய்வுக்குழு, பதிப்பு மற்றும் காப்புரிமை இணைந்து இளம் கண்டுபிடிப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய மாநில அளவிலான அனைத்து கல்லூரிகளுக்கும் இடையில் "நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி தாக்கத்தை ஏற்படுத்தும் சிந்தனைக்கானப் புதுமைகளை உருவாக்குதல்" என்ற தலைப்பில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சிப் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வரவேற்புரையினை முதுநிலை வணிகமேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சு. உமா சர்மா வழங்கினார். கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி அ. மேரி ஜோஸ்பின் ராணி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ. ஆரோக்கிய ஜெயசீலி, துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ. அமலா வளர்மதி, தேர்வாணையர் முனைவர் அருட்சகோதரி வின்சி, உதவி துணை முதல்வர் முனைவர் ஜி. அபிபியூலா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம், சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் P. சீனுவாசகுமரன், மாணவர்களுக்கு புதுமை என்பது அறிவியல் துறைக்கு மட்டுமல்ல, அனைத்து துறைகளுக்கம் பொதுவானது. தேடுதல் எங்கெல்லாம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் புதுமைகள் நிறைந்து காணப்படும். மாணவர்கள் புதுமைகளை நோக்கி பயணித்தால் தான் பல நல்ல ஆய்வுகளைக் கல்விசார் சமூகத்திற்கு தரமுடியும். அத்தகைய முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபட்டு தம் துறைக்கும், ஆசிரியருக்கும், தம் கல்லூரிக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்றும், நல்ல சிந்தனைகளை மேம்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
நடுவர்களாக த.கி.மு. கலைக்கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் T. கோமதி, வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, பொருளியல் இணைப்பேராசிரியர் முனைவர் V.J.R. எமரல்சன் மோசஸ், ஆம்பூர், மசரள் உளம் கல்லூரி, கணிதத்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் R. ஜோதிலட்சுமி, வேலூர், Redback IT Solutions, Director, செல்வி K. சிவபிரியா ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.
இந்நிகழ்வை ஆய்வுக்குழு இயக்குநர் கணிதத்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் அ. சபர்மதி ஒருங்கிணைத்தார். விலங்கியல் துறை உதவிப்பேராசிரியர், முனைவர் K. அனு நன்றியுரை வழங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பிற கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுத் திட்டத்தை சமர்ப்பித்து பரிசினையும் சான்றிதழையும் பெற்றனர். நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
Comments
Post a Comment