விவசாயிகளுடன் இணைந்து பூச்சிக்கொல்லி தெளிப்பு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.
திருச்சிராப்பள்ளி, ஜன.23-திருச்சி மாவட்டம்,
துறையூர் வட்டம், செங்காட்டுப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுடன் இணைந்து வயல்களில் பச்சைப்புழு கட்டுப்பாட்டிற்கான பூச்சிக்கொல்லி தெளிப்பு பணியில் நாளந்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் ஜெ. வெங்கட பிரபு, பா. குணா இணை பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ம. ஆர்த்தி, உதவிப்பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ச. பூர்ணிமா உதவிப்பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஜே. மைக்ளின் ஜோஷி, மு. சோபிகா, பா. சுபஸ்ரீ,செ. சுவாதி, க. தமிழரசி, மு. தனுஷியா, கா. வெண்முகில் ஆகியோர் செயலில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வின் போது, எந்த வகை பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும், எவ்வளவு அளவில் தெளிக்க வேண்டும், தெளிப்பதற்கான சரியான முறை என்ன, மேலும் எந்த நேரத்தில் தெளிப்பது சிறந்தது என்பதையும் மாணவிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கற்றுக்கொண்டனர்.
மேலும், பாதுகாப்பு முறைகள், கருவிகள் பயன்படுத்தும் விதம் மற்றும் பயிருக்கு சேதம் இல்லாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நவீன நடைமுறைகள் குறித்தும் விளக்கம் வழங்கப்பட்டது.
இந்த அனுபவம் மாணவிகளுக்கு நடைமுறை அறிவை வளர்த்ததுடன், விவசாயிகளுக்கும் பயனுள்ள தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவியாக அமைந்தது.
Comments
Post a Comment