தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 77வது குடியரத் தின விழாவை முன்னிட்டு, நேற்று (26.01.2026) மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் தலைமையில் தேசியக் கொடி கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், துணை மற்றும் உதவிப்பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதகர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள், செவிலியர்கள், பயிற்சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.