வேலூர், ஜன.27-
வேலூர் மாவட்டம், காட்பாடி, விண்ணம்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முரளி தலைமையில், 77 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தனர். உங்கள் குறைகள் விரைவாக தீர்த்து வைக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முரளி தெரிவித்தார். அவருடன் அறங்காவலர் குழு தலைவர் முரளி கலந்து கொண்டார். இதில் ஊராட்சி செயலாளர் பஞ்சாட்சரம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment