கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் 173(2) FIR - உங்கள் உரிமை திட்டத்தினை


பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து நம்பிக்கையை அதிகரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS  தொடங்கி வைத்த, எஃப் ஐ ஆர் நகலை புகார்தாரருக்கு வழங்கும் 173(2)- FIR உங்கள் உரிமை திட்டம்

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் தினமான குடியரசு தினமாகிய 26-01-26 அன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் 173(2) FIR - உங்கள் உரிமை திட்டத்தினை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து புகார்தாரர்களுக்கு எஃப் ஐ ஆர் நகலினை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

173(2) FIR- உங்கள் உரிமை திட்டம்

BNSS சட்டபிரிவு 173(2) வழக்கின் புகார்தாரருக்கு FIR நகலினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளின் FIR நகல் உடனடியாக புகார்தாரர்களுக்கு காவல் நிலையம் அல்லது புகார்தாரர்களின் கிராமங்களில் நியமிக்கப்பட்ட ஊர் காவல் கண்காணிப்பு திட்ட போலீசாரின் மூலமாக வழங்கப்படும். திட்டத்தின் நோக்கம் பொதுமக்களிடம் காவல்துறையின் நம்பிக்கையை அதிகரித்தல். FIR பதிவு சம்பந்தமான வெளிப்படைத்தன்மை. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் மதிப்பை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்தல் மேலும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமான இடைவெளியை குறைத்தல்.

பொதுமக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்தல் வெளிப்படையான காவல்துறை நிர்வாகம். பொது கருத்து மையம் இந்தத் திட்டமானது சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  நாகசங்கர் அவர்கள் மேற்பார்வையில் Public Feedback Centre மூலம் கண்காணிக்கப்பட்டு புகார்தாரர்கள் அனைவருக்கும் வழக்கு பதிவு செய்தவுடன் FIR நகலானது உடனடியாக இலவசமாக கிடைப்பது உறுதி செய்யப்படும். இது சம்பந்தமான தகவல்களை public feedback centre எண்கள் 77082391006385211224 மூலம் தெரிந்து கொள்ளலாம். என  தெரிவித்தார்

Comments