தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் பிரம்மஸ்ரீ எம்.கே.தியாகராஜ பாகவதர் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் பிரம்மஸ்ரீ எம்.கே.தியாகராஜ பாகவதர் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
சேலம் டவுன் பொற்கொல்லர் தெரு, தியாகராஜ பாகவதர் கொடிக்கம்பம் அருகில் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் பிரம்மஸ்ரீ எம்.கே.தியாகராஜ பாகவதர் 114-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களின் தம்பி மகள் சாந்தா ராமலிங்கம், குரு ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தியாகராஜ பாகவதர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
இந்நிகழ்வில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் கோல்ட் தேவா என்கிற தேவராஜ் முன்னிலை வகித்தார். மேலும், மாநில மகளிர் அணி செயலாளர் உமாராணி, மாவட்ட மகளிர் அணி சசிகலா தேவராஜ் மற்றும் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஏ.ஆர்.ராஜேந்திரன், ஞானசேகரன், மணிகண்டன், மாதவ அங்கு, ராஜ், ரவி, ராஜேந்திரன், தச்சு தொழிலாளர் சங்கத் தலைவர் அருணாச்சலம், தமிழ் செல்வம், பாலாஜி, செந்தில், நடராஜன் மற்றும் விஸ்வகர்மா நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அன்னதானம் செய்தார்கள்.
Comments
Post a Comment