ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அசாம் பாஜக அரசையும், பாசிச பாஜகவையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்,
அசாம் பாஜக அரசையும், பாசிச பாஜகவையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நேற்று (23.01.2024) ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில், தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய, அசாம் பாஜக அரசையும், பாசிச பாஜகவையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான், ஆற்காடு வட்டாரத் தலைவர்கள் எஸ்.எம்.வீரப்பா, மேல்விசாரம் நகரத் தலைவர்
அப்துல் சுகூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் கேசவன், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் அசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத் துணைத் தலைவர்
விநாயகம், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் கே.ஓ.நிஷாத் அஹமத், மாவட்ட பொதுச் செயலாளர் கே. வேலூர் நந்தகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் மேச்சேரி பன்னீர்செல்வம், RGPRS மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், மாவட்ட பொது செயலாளர் வசீகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்.
மாவட்ட பொதுச்செயலாளர்கள்
ஆனந்தன், தாஜ்புர சம்பத், இளைஞர் காங்கிரஸ் ஆற்காடு சட்டமன்ற தொகுதி தலைவர் சையத் முஜீப், ராணிப்பேட்டை உத்தமன், குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment