கொளத்தூர் மாவட்ட கே-5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் காவல்துறை சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையர்!
சென்னை, ஜன.15-சென்னை, கொளத்தூர் தொகுதியான பெரவள்ளூர் காவல் நிலையத்தில், சமத்துவ பொங்கல் விழா முன்னிட்டு, கொளத்தூர் மாவட்டப் பகுதியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெரவள்ளூர் காவல் நிலையத்தில் கொளத்தூர் மாவட்ட துணை ஆணையர் சக்திவேல் தலைமையில், புழல் உதவி ஆணையர் சகாதேவன், கொளத்தூர் உதவி ஆணையர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில், பெரவள்ளூர் காவல் ஆய்வாளர்கள் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவமணி, புழல் ஆய்வாளர் விஜயகாந்த், வில்லிவாக்கம் ஆய்வாளர் பிரித்திவிராஜ், சார்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், பெண் காவலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு சீருடை மற்றும் இனிப்புகள், 5 கிலோ அரிசி, பாத்திரம், பெண்களுக்கு புடவைகள் ஆகியவை காவல்துறையினர் சார்பாக வழங்கப்பட்டன.
Comments
Post a Comment