2023 மை தருமபுரி அமைப்பின் சாதனை துளிகள்



🍚 மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டம் மூலம் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கி உள்ளோம்.

🩸 மை தருமபுரி ரத்ததான சேவை மூலம் அவசர ரத்ததான உதவி, முகாம் என மொத்தம் 8000 அதிகமான அலகு யூனிட் ரத்தம் இதுவரை சேகரித்து கொடுத்துள்ளோம். அது மட்டுமல்லாமல் மை தருமபுரி சதீஸ் குமார் ஆகிய நான் இதுவரை 80 முறை ரத்ததானம் கொடை அளித்துள்ளேன்.

⚰️ மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 18,2022 முதல் தருமபுரியில் செய்து வருகின்றோம். இதுவரை 74 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளோம். அதில் ஆண்கள் 61, பெண்கள் 6, பச்சிளம் குழந்தைகள் 2, ஏழ்மையில் இருந்தோர் 5 ஆகும்.

⛈️ சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண உதவியாக 2000 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், 1000 நபர்களுக்கு உணவை நேரடியாக களத்தில் சென்று வழங்கினோம். அதேபோல், தூத்துக்குடி பெருவெள்ள நிவாரண உதவியாக நேரடியாக களத்திற்கு சென்று 3000 குடும்பங்களுக்குத் தேவையான மளிகை பொருட்கள், உணவுகளை வழங்கினோம்.

👔 மை தருமபுரி அமைப்பின் சார்பாக மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு உயர்தரமான மேலங்கி வழங்கி அவர்களது கல்வியை மேலும் ஊக்குவித்து வருகிறோம். கடந்தாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பள்ளி மாணவர்களுக்கு மேலங்கி வழங்கி உள்ளோம்.

🪐  தருமபுரி மாவட்ட கிராமத்தில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள 100 கைம்பெண் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கியுள்ளோம்.

💊 மை தருமபுரி மணீஷ் மருத்துவ சேவை திட்டம் மூலம் ஏழ்மையில் உள்ளோர், மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், மருத்துவ முகாம்கள் மாதந்தோறும் செய்து வருகிறோம்.

🏆 மை தருமபுரி அமைப்பின் சேவையை பாராட்டி நியூஸ் 7 தொலைக்காட்சி மூலம் எழுமின் சேவை விருது, அப்துல் கலாம் சாதனையாளர் விருது, தமிழகத்தின் தலைசிறந்த சமூக சேவை அமைப்பு காண விருது, பாண்டிச்சேரி தமிழ் சங்கத்தின் அப்துல் கலாம் விருது, தகடூர் குரல் சிறந்த சமூக சேவை தன்னார்வலர் அமைப்பு விருது, பாரதமாதா பவுண்டேஷன் சார்பாக உயிர் காக்கும் உன்னத சேவைக்கான தங்க விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளோம்.

*மை தருமபுரி அமைப்பின் சேவைகள் இருக்கும் வரை இங்கு யாரும் ஆதரவற்றோர் அனாதைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதநேயம் காப்போம் மனிதநேயம் போற்றுவோம்.*

Comments