Mr.பாரப்பட்டியார் கிளாசிக்-2023 சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி!
சேலம்,டிச.04- சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத் தலைவர் பாரபட்டி சுரேஷ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, பாரபட்டியார் கிளாசிக்-2023 சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி பனமரத்துப்பட்டி சேலம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் கேடயங்கள் மற்றும் ஊக்கத் தொகையை அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் பனமரத்துப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் உமாசங்கர், பனமரத்துப்பட்டி ஒன்றியகுழு தணைத்தலைவர் காட்டூர் சங்கர், ஒன்றிய பொருளாளரும்,
ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலம் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தனபால், பிரபாகரன், சக்திவேல், ஜிஸ்லி அருண், பிரசாந்த், வினோத், மாணவர்கள், ஜூனியர், சீனியர், மென் பிசிபிக் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் ஆணழகன் சங்க நிர்வாகிகள் மற்றும் கே.எஸ்.& கே.எஸ்.எஸ். குரூப்ஸ் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment