சென்னையை புரட்டிப் போட்ட கனமழை!
குப்பை வண்டியில் உணவு ஏற்றிச் செல்லும் அவலம்!
சென்னை, பெரம்பூர் டூ சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் பேருந்துகள் கனமழையின் காரணமாக தேங்கி நிற்கும் தண்ணீரால் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பேருந்து மற்றும் ரயில் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் ஆட்டோக்களில் அதிகப்படியான கட்டணங்களை உயர்த்திக் கேட்கும் அவல நிலை உண்டாகியுள்ளது.
பயணிகளும் வேறு வழி இன்றி ஆட்டோவில் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் சூழ்நிலையுள்ளது.
தற்போது புயலின் காரணமாக தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கு குப்பை லாரியில் காலை சிற்றுண்டி கொண்டு செல்லும் அவல நிலையும் உண்டாகியுள்ளது.
மாநகராட்சியில் வேறு வாகனங்களே இல்லையா? என்று தெரியவில்லை.
குப்பையும் உணவுப் பொருட்களும் ஒன்றா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்!
விடை சொல்லுமா மாநகராட்சி...
Comments
Post a Comment