முன்னாள் படைவீரர்களுக்காக கொடிநாள் வசூலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்!

முன்னாள் படைவீரர்களுக்காக கொடிநாள் வசூலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்! 
வேலூர்,டிச.07- வேலூர் மாவட்டம், வேலூர் நகர அரங்கில் இருந்து மாவட்ட நிர்வாகமும், முன்னாள் படைவீரர் நலத்துறையும் இணைந்து முன்னாள் படைவீரர்களுக்கான கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று (07.12.2023) உண்டியலில் பணம் செலுத்தி துவங்கி வைத்தார்.
       இதில் மாணவர்கள் முன்னாள் படைவீரர்கள், அரசு அதிகாரிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், ஊர்க்காவல் படையினர் போன்றவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கொடி நாள் வசூலை செய்தனர்.
       இதில் திரட்டப்படும் நிதி முன்னாள் படைவீரர்களுக்கும் போரில் கைகால்களை இழந்த ராணுவ வீரர்களின் மறுவாழ்விற்காகவும் இந்த நிதியானது வழங்கப்படுகிறது. இதில் முன்னாள் படைவீரர் நல இயக்குநர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments