கள்ளச் சந்தை மதுபானத்தை தடை செய்ய அரசு மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் கோரிக்கை!

கள்ளச் சந்தை மதுபானத்தை தடை செய்ய அரசு மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் கோரிக்கை!
ராணிப்பேட்டை, டிச.07- 
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், முள்ளுவாடி கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக நிர்வாகி எஸ். ஆறுமுகம் தலைமையில் முள்ளுவாடி கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடை திறக்க வேண்டி மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
   இதில் திமுக கூட்டுறவு தலைவர் ரவி, திமுக கிளை செயலாளர்கள் வேலு, முரளி, 
ஆறுமுகம், கோபி, வெங்கடேசன், பன்னீர்செல்வம், மஞ்சுநாதன், ஜெயவேலு, மனோகரன், ராஜேந்திரன், அசோக் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஏற்கனவே முள்ளுவாடி கிராமத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வந்த நிலையில் தற்போது கடை இல்லாததால் இந்தப் பகுதியில் நாள் முழுவதும் கள்ளச் சந்தையில் மதுபானம் அதிக விலைக்கு
விற்கப்படுகிறது. 
மேலும் முள்ளுவாடி கிராமத்திலிருந்து அரசு மதுபானக் கடைக்கு செல்ல வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் கூலித் தொழில் செய்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.
 ‌‌ ஆகையால் அரசு மதுபானக் கடை திறந்தால் கள்ள சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும். மேலும் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Comments