*12 ஆம் ஆண்டில் மை தருமபுரி அமைப்பு*
மை தருமபுரி சமூக சேவை அமைப்பு ஜனவரி 1, 2013ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்டு பின்னாளில் ஒவ்வொரு படியாக ஒவ்வொரு சேவையாக தொடங்கி இன்று தருமபுரியில் ஒரு முக்கிய சமூக சேவை அமைப்பாக அடித்தட்டு ஏழை மக்களுக்கு தேவையான உதவியை தேடிச்சென்று உதவக்கூடிய ஒரு அமைப்பாக உருவாகியுள்ளது. சேவையில் 11 ஆண்டுகளைக் கடந்து 2024 புத்தாண்டில் 12 ஆம் ஆண்டில் மை தருமபுரி சமூக சேவை அமைப்பு அடியெடுத்து வைக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்கள், தோழமைகள், முக்கிய நபர்கள், பிரமுகர்கள், அரசியல் சார்ந்த சாராத நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எங்களது சேவை மேலும் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து தங்கள் நல் ஆதரவை வழங்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மை தருமபுரி அமைப்பின் சேவைகள் இருக்கும் வரை இங்கு யாரும் ஆதரவற்றவர்கள், அனாதைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments
Post a Comment