மக்களுடன் முதல்வர்" திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வேண்டுகோள்.
"மக்களுடன் முதல்வர்" திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வேண்டுகோள்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி, ராமேஸ்வரம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் 18.12.2023 அன்று கோவையில் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டு இதுவரை 06 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 2,000 - க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இத்திட்டத்தின் நோக்கம் நகராட்சி, பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைத்திடும் வகையில் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இம்முகாம்களை தொடர்ந்து 06.01.2024. சனிக்கிழமை வரை அந்தந்த பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட வார்டுகளை ஒன்றிணைத்து இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.
முகாம் நடைபெறும் பொழுது அந்தந்த வார்டுக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து விண்ணப்பித்து பயன் பெற வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து, முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார்.
இதே போல், ராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான திட்டங்களில் ஒன்றாக மக்களுடன் முதல்வர் திட்டம் இருந்து வருவதுடன் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் 13 துறைகளில் அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, பொதுமக்கள் வசிப்பிட பகுதிகளிலேயே வந்து முகாம் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதன் மூலம் எளிதாக அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட பயனுள்ளதாக இருக்கும்.
ராமேஸ்வரம் நகராட்சியை பொறுத்தவரை வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான கோரிக்கைகள் அதிகளவில் உள்ளது. எனவே, வருவாய்த்துறை நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து நிறைவேற்றித் தரவேண்டுமென ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
ஆய்வில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் மாரிச் செல்வி, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, பரமக்குடி நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி, ராமேஸ்வரம் வட்டாட்சியர் பாலமுருகன், ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் நாசர்கான், நகராட்சி ஆணையர் கண்ணன், பொறியாளர் பாண்டீஸ்வரி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment