மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறந்த சேவையாற்றிய வாலாஜாபேட்டை அறம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளைக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழை அமைச்சர் காந்தி வழங்கினார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வாலாஜாபேட்டை
அறம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளைக்கு அமைச்சர் வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இதில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் மேம்பாட்டிற்கும் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக நினைவுப்பரிசு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, வாலாஜா
அறம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளைக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர்
NK.பன்னீர்செல்வம், செயலாளர் பொற்செல்வி, பொருளாளர் அமுதா பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் கணேஷ் மற்றும் உறுப்பினர்கள் ரோஜா,
கௌசல்யா, விஜயலட்சுமி, சோனியா காந்தி, லட்சுமி, தேவி பிரியா ஆகியோர் விருது பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சரவண குமார் கலந்து கொண்டனர். அறம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.