காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.சங்கர் இல்லம் சென்று அவரது மகன் கோபிநாத்-பாரதி ஆகிய திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.சங்கர் இல்லம்  சென்று அவரது மகன் கோபிநாத்-பாரதி ஆகிய திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த  மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
காஞ்சிபுரம், டிச.10- காஞ்சிபுரம் மாவட்டம்,  காலூர் ஊராட்சியில், கட்சிக் கொடியேற்றி வைத்த பின்னர், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.சங்கர்-சகுந்தலாவின் இல்லத் திருமண வரவேற்பு விழாவுக்கு கடந்த 29.11.2023 ஆம் தேதியன்று வரமுடியாத சூழ்நிலையில்,  நேற்று (09.12.2023) நேரில் சென்று அவர்களின் மகன் கோபிநாத்-பாரதி ஆகிய திருமண தம்பதிகளை மனதார வாழ்த்தினார்.
       மேலும், முன்னதாக மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
       இந்நிகழ்ச்சியின் போது, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பெ. மகேஷ்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன்,  மாவட்ட தலைவர் உமாபதி, வரதராஜன்,  காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் காலூர் சத்யா, களக்காட்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments