வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களவையில் விதி எண்:377 கீழ் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வலியுறுத்தல்...
வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்களவையில் விதி எண்:377 கீழ் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வலியுறுத்தல்...
வேலூர் விமான நிலையத்தில் DGCA-இன் ஆய்வுப் பணிகளை விரைவுப்படுத்தவும், விரைவில் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேலூர் விமான நிலையத் திட்டம் பல கோடி ரூபாய் செலவழித்தும் இன்னும் நிலுவையில் உள்ளது. அது எப்போது நிறைவேறும்? என்பது தமிழக மக்களின் குறிப்பாக எனது வேலூர் மக்களவைத் தொகுதி மக்களின் மனதில் நீடித்து வரும் ஒரு நியாயமான கேள்வியாக உள்ளது. 2017-இல் UDAN பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் தற்போதுள்ள சிறிய விமான நிலையத்தை விமான நிலையமாக விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முழு வீச்சில் துவங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 700 மீட்டர் நீள ஓடுபாதை 850 மீட்டர் ஓடுபாதையாக தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் பல வருட கனவான வேலூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருதல் எப்போது நடைபெறும் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இந்திய விமான நிலைய அத்தாரிட்டிகளின் அலட்சிய அணுகுமுறை மற்றும் டிஜிசிஏ அதிகாரிகளின் நிலுவையில் உள்ள ஆய்வுப் பணிகள் காரணமாக வேலூர் விமான நிலைய விரிவாக்கப் பணி நிலுவையில் உள்ளதால் விமான நிலையம் இன்னும் செயல்பட இயலவில்லை.
உடான்(UDAN) திட்டத்தின் கீழ் விமான நிலைய இணைப்புக்கு வேலூர் நகரம் தகுதியானதாக இருப்பதற்கு சமூக பொருளாதார ரீதியாக வேலூர் மாநகரம் கண்டு வரும் வளர்ச்சி உள்ளது. எனவே, வேலூர் விமான நிலையத்தை விரைந்து முடிக்குமாறு மாண்புமிகு அமைச்சருக்கு நான் ஏற்கனவே இப்பிரச்சனையை நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பியிருந்தேன்.
இது குறித்து மாண்புமிகு விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதமும் எழுதியிருந்தேன்.
மாண்புமிகு பிரதமர், மாண்புமிகு நிதியமைச்சர், மாண்புமிகு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, விரிவாக்கப்பட்ட வேலூர் விமான நிலையத்தை விரைந்து அமைப்பதற்கு டிஜிசிஏ -வின் ஆய்வை விரைவுப்படுத்துமாறு மாண்புமிகு அமைச்சரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment