கடலூரில் தேசிய மீனவர் கட்சியின் சார்பில் நேற்று (26.12.2023) சுனாமி ஆழிப்பேரலை பேரிடர் பெருந்துயர் தின 19-ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

கடலூரில் தேசிய மீனவர் கட்சியின் சார்பில் நேற்று (26.12.2023) சுனாமி ஆழிப்பேரலை பேரிடர் பெருந்துயர் தின 19-ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
.          கடலூர், டிச.27-கடலூர் தேவனாம்பட்டிணம் வெள்ளிக் கடற்கரையில் சுனாமி ஆழிப்பேரலை பேரிடர் நினைவிடத்தில் 19-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி, நேற்று (26.12.2023) மாநிலப் பொருளாளர் A.R. வேலவன்   தலைமையில் நடைபெற்றது.
     இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி, மாவட்ட தலைவர் செல்வ. ஏழுமலை, மாவட்ட செயலாளர் என்.உதயகுமார், மாவட்ட பொருளாளர் எஸ்.அன்பு,  மாவட்ட துணை தலைவர்
ஆர்.மஞ்சமுத்து, மாவட்ட துணை செயலாளர்   எம். தொட்டியத்தான், மாநகர செயலாளர் G.குமணன்,  மாநகர துணை செயலாளர்
கே. சத்தியமூர்த்தி, மாநகர இணை செயலாளர்  P.ஆறுமுகம்  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
     சுனாமி பேரிடரின் 19-ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக  தேசிய மீனவர் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் K.சிவராஜ் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.  
     அப்போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுபோன்று இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் மீனவ மக்கள் உடைமைக்கும், உயிருக்கும்    பாதிக்காத வண்ணம், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
      மேலும், பேரிடரின் பொழுது பாதிப்பை குறைக்க மற்றும் தற்காத்துக் கொள்ள  கடற்கரை வாழ்விடமாகக் கொண்ட தமிழக பாரம்பரிய மீனவ மக்களுக்கு பயிற்சிகளும் ஒத்திகை நிகழ்வுகளும் முறையாக நடத்தப்பட வேண்டும்.
       இயற்கை சீற்றம் மற்றும் பேரிடரின் போது அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் மற்றும் அவசரகால வெளியேறும் வழி உள்ளிட்டவைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமப் பகுதிகளிலும், பொது இடங்களில், பள்ளிகளில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
        தமிழகத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக மீனவ கிராம மக்கள் அவசரகால நிலையில் வெளியேற தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
       கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, பாரம்பரிய மீனவர்களின் நீண்டகால குடியிருப்பு திட்டங்கள் உருவாக்கவும்,
மீனவர்களின் பண்ணெடுங்காலமாக அனுபவத்தில் உள்ள பாரம்பரிய உரிமையுள்ள நிலப்பரப்பை வேறு பயன்பாடுகளுக்கு எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் அரசு கையகப்படுத்தக் கூடாது.
     மீனவர்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள், இறால் குஞ்சு பொரிப்பகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டுமாய் மத்திய, மாநில அரசுகளை  கேட்டுக்கொள்கிறோம்.
     தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழக ம்  சட்டமன்றத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
    மேலும், இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் எல். பிரவீண்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்  கே.கனகசபை, மாநில ஆலோசகர் என். திருநாவுக்கரசு, மாநில ஆலோசகர்  வழக்கறிஞர்கள் M.யுவராஜா, K.வச்சலா
மற்றும் மாநகர, நகர, கிராம அளவிலான கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், மீனவ மக்கள் மற்றும் மீனவப் பெண்கள், மீன் வணிகர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

Comments