சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா!
சேலம், டிச.10-சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் வள்ளியப்பா கலையரங்கில் நடைபெற்றது.
கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் கலந்து கொண்டு 25 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 42 மாணவ, மாணவிகள் உட்பட 1331 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா பேசும்பொழுது, சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்குகேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்துக் கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்த விழாவில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment