மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது! இருந்தாலும் இன்னும் அதிக அளவு பணியாளர்களைக் கொண்டு வெள்ள நீரை வெளியேற்றி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!! மீண்டும் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரதமராவார் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி!!!
மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது! இருந்தாலும் இன்னும் அதிக அளவு பணியாளர்களைக் கொண்டு வெள்ள நீரை வெளியேற்றி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!! மீண்டும் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி பிரதமராவார் என்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி!!!
வேலூர், டிச.10- வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பிலும், புதிய நீதிக்கட்சியின் சார்பிலும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கண் சிகிச்சை, காது, மூக்கு தொண்டை, எலும்பு சிகிச்சை, நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதில் புதிய நீதிகட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு கண் கண்ணாடிகளை மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்கின்றனர். மக்களும் பயனடையும் வகையில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி,வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மருத்துவ முகாமினை நடத்தியுள்ளோம். இதில் அதிக அளவில் மக்கள் பயனடைந்துள்ளனர். பலருக்கு சென்னையில் ஏ.சி.எஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து காப்பாற்றியுள்ளோம்.
சென்னை வெள்ளத்திற்கான தீர்வு, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் பெரிய அளவில் 30 அடி ஆழத்திற்கு பூமிக்கடியில் பாதாளச் சாக்கடைகள் அமைக்கபடுகிறது. அவைகளில் மழைகாலங்களில் சுனாமி போன்ற காலங்களிலும் நீரானது பாதாள சாக்கடைகள் வழியாக வெளியேறிவிடும். இதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அது போன்ற கட்டமைப்புகளை சென்னையிலும் செய்ய வேண்டும்.
தமிழக அரசு வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் நன்றாக செயல்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களை அதிகப்படுத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஐந்து மாநில சட்டபேரவை தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வென்றிருப்பது மீண்டும் மக்கள் பிரதமராக மோடி வரவேண்டும் என விரும்புவதையே காட்டுகிறது. காரணம், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்று அறிவிக்கவில்லை. அவர்களால் தேர்தல் நேரத்திலும் அறிவிக்க முடியாது. ஆனால் பாஜகவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர். அவர் தான் மீண்டும் பிரதமராக வரவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதிலேயே சிக்கல் உள்ளது. எனவே 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராவார் என கூறினார். பேட்டியின் போது, கராத்தே ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment