நெடுஞ்சாலைத்துறை பணிகள் மேற்கொள்ளும் போது திட்ட மதிப்பு, ஒப்பந்ததாரர் பெயர், சாலையின் நீளம், அகலம் குறித்த விபரக் குறிப்பு பலகை கூடவைப்பது இல்லை-கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு!
நெடுஞ்சாலைத்துறை பணிகள் மேற்கொள்ளும் போது திட்ட மதிப்பு, ஒப்பந்ததாரர் பெயர், சாலையின் நீளம், அகலம் குறித்த விபரக் குறிப்பு பலகை கூட
வைப்பது இல்லை-கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு!
கடலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 45 வார்டுகளில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 பஞ்சாயத்துகளில் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை சாலைகள் தேசிய நெடுஞ்சாலை துறை சாலைகள் எங்கும் பல்வேறு இடங்களில் பெரும்பள்ளங்களுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
இதை சரி செய்வதற்கு அரசு முன் வருவதில்லை.
மேலும், புதிதாக போடப்படும் சாலைகளும் தரம் இன்றி போடப்படுகின்றது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.
லட்சக்கணக்கில் செலவு செய்து சாலை போடப்படுகிறது. மேலும், எத்தனை ஆண்டுகளுக்கு அந்த சாலை பழுதாகாமல் போட்டது போட்டபடியே இருக்க வேண்டும் என்கிற உத்தரவாதத்துடன் போடப்படுகிறது என்பதை எந்த அதிகாரியும் கண்டு கொள்வதே இல்லை. மேலும் திட்ட மதிப்பு ரூபாய், ஒப்பந்ததாரர் பெயர், சாலையின் நீளம், அகலம்
குறித்து விபரக் குறிப்பு பலகை கூட வைப்பது இல்லை. எனவே
இதில் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாநகர பொதுநல
இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே. ரவி கோரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் கூட, கடலூர் கம்மியம்பேட்டை- செம்மண்டலம் செல்லும் சாலையில் உள்ள சாலை வளைவுப் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த நிலையில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்வதைக் கண்ட போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருமாவளவன், சொந்த முயற்சியில் சிமெண்ட் கலவைகளை கொட்டி சாலையை சீரமைக்கும் நிலைமையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் உள்ளதா? ஆனாலும், இப்பணியை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளருக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment