ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட அ.இ.அதிமுக அலுவலகம் திறப்பு விழா..!!

ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட  அ.இ.அதிமுக அலுவலகம் திறப்பு விழா..!!
ராணிப்பேட்டை, நவ.16- ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை காரை கூட்டு ரோடு, அருகில்  உள்ள எச்.டி.எப்.சி  பேங்க் மாடியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக அ.இ.அதிமுக அலுவலகம்  ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்  எஸ்.எம்.சுகுமார் தலைமையில் மேளத் தாளத்துடன், பட்டாசுகள் வெடித்தும், மிகப் பிரம்மாண்டமான முறையில்  திறப்பு விழா நடைபெற்றது.
         இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக  அ.இ.அதிமுக. கழக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  கே.பி. முனுசாமி  விழாவில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 
          மேலும், நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர்  ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கழக நிர்வாகிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments