கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானதும், எதிர்காலத்தை தீர்மானிக்கிற முக்கியமான காலக்கட்டம் :கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. கே.பவனீஸ்வரி அறிவுரை!!
கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானதும், எதிர்காலத்தை தீர்மானிக்கிற முக்கியமான காலக்கட்டம் :
கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. கே.பவனீஸ்வரி அறிவுரை!!
கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய இளைஞர் விழாவிற்கான மாவட்ட அளவிலான தேர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர், செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் கே.பவனீஸ்வரி, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிகழ்வினைக் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாணவர் - மாணவியர்கள் மத்தியில் அவர் அறிவுரைகள் வழங்கி பேசியதாவது:
போட்டிகள், நம்முடைய திறமைகளை வளர்ப்பதற்கும், போட்டியாளர்களிடமிருந்து கற்று கொள்வதற்கும் உதவுகிறது. திறன்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்பது மிக முக்கியம். திறன்களை வளர்த்துக் கொண்டால் எல்லாத் துறைகளிலும் சாதிக்கலாம்.
நல்ல பழக்க வழக்கங்கள் தொடர்ந்து இருந்தால் அது நம்முடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். நல்ல பழக்க வழக்கங்களைப் போலவே கெட்ட பழக்க வழக்கங்கள் இருந்தால் அது நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து எல்லாருமே விலகி இருக்க வேண்டும். அப்போது தான், சமூகம் வளர்ச்சி அடையும்.
கல்லூரி வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது. எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற முக்கியமான கால கட்டம் இதுதான்.
எனவே, இங்கு படிக்கும் காலத்தில் உங்கள் திறன்களை சரியாக வளர்த்துக் கொள்ளுங்கள். கல்வியால் தான் வாழ்க்கையில் பெரிய உயரங்களைத் தொட முடியும் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து,
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவிற்கான முன் அணிவகுப்பு முகாமில் தமிழ்நாடு சார்பில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா. எஸ்.சுபாஷினி, மாணவி என்.வி.பவ்யா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தமைக்காக சிறப்பு அழைப்பாளர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு
பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சார்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் - மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.பிரகதீஷ்வரன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment