தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரங்கல்...
தோழர் என்.சங்கரய்யா மறைவு வருத்தம் அளிக்கிறது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேதனையை பகிர்ந்து கொள்கிறது.
கம்யூனிஸ்ட் தோழர், இந்திய சுதந்திர போரட்ட வீரர் சங்கரய்யா அவர்கள் மறைவு என்பது மிக பெரிய அளவில் வருத்தம் அளிக்கிறது.
பொது வாழ்வில் நீண்ட காலமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், மக்களுக்காக பல்வேறு போராட்டக் காலங்களில் பங்காற்றியவர். மார்க்ஸிய, லெனிய சித்தாந்தங்கள் பணியில் மற்றும் அடித்தட்டு மக்கள் ஏற்றத்திற்கு முதல் ஆளாக களத்தில் நிற்பவர்.
1995-இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1967 இல் மதுரை மேற்குத் தொகுதியிலிருந்தும், 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்தும் இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவர் 1962 மற்றும் 1957 தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மாணவப் பருவத்தில் இருந்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக தடியடி, வழக்கு, சிறை என சென்றவர் இந்திய சுதந்திர போரட்ட வீரர் சங்கரய்யா.
எங்களது மாணவப் பருவத்தில் மதுரை வீதிகளில் நேரடியாக அவரிடத்தில் உரையாடுவோம். மார்க்சியம், லெனியம் பொதுவுடைமை குறித்து எது கேட்டாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் சளைக்காமல் பதில் கூறுவார். அவர் வாழ்க்கையே இன்று வரலாறாக மாறியுள்ளது.
தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைவு என்பது மிக பெரிய வருத்தம் அளிக்கிறது.
அவரை இழந்து உள்ள தோழர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேதனையை பகிர்ந்து கொள்கிறது என
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் I.முஹம்மது முனீர், தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment