இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய் சேய் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது!வேலூரில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேட்டி!!
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய் சேய் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது!
வேலூரில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேட்டி!!
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி நேற்று (13.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாப்பாத்தியம்மாள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை என்பது அனைத்து வசதிகளுடனும் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்படும். டெங்கு 2023 ஆம் ஆண்டு அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்கள் வீடுகளில் மழைநீர் மற்றும் பிரிட்ஜ் பின்புறம் நல்ல தண்ணீரை தேக்கி வைக்க கூடாது. டெங்கு காய்ச்சலுக்காக காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. மக்கள் தாங்களே காய்ச்சல் வந்தால் மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அனுக வேண்டும். இந்த முகாம்களின் நோக்கம் என்னவென்றால் ரத்த பரிசோதனை செய்து முகாம்களில் டெங்கு நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கொசுவலைகள் போடப்பட்டு அந்த வார்டுகள் தனி வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பட்டாசு வெடித்து காயம் அடைந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் அங்கு இல்லை என்ற புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும். தாய் சேய் இறப்பு விகிதம் என்பது இந்திய அளவில் தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது. தாய் சேய் நல பிரிவு தனியாக அரசு மருத்துவமனைகளில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தாய் சேய் இறப்பு மிகவும் குறைவு. அதனை இல்லாமல் செய்து அனைத்து தாய் சேய்களையும் நல்ல முறையில் காப்பாற்ற சிறப்பு பிரிவுகளும் தற்போது செயல்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
Comments
Post a Comment