சாலை விபத்துகள் மற்றும் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற அவசர உதவிக்கு அழைக்கமீனாட்சி மருத்துவமனையின் அவசரநிலை தொடர்பு எண் அறிமுகம்!

சாலை விபத்துகள் மற்றும் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற அவசர உதவிக்கு அழைக்க
மீனாட்சி மருத்துவமனையின் அவசரநிலை தொடர்பு எண் அறிமுகம்!
தஞ்சாவூர், நவ.01- தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கும், மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக் குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி  தொடங்கி வைத்தார்.
         தஞ்சாவூரில் பல்வேறு துறைகளுடன் உயர்சிகிச்சை வழங்கும் மருத்துவமனை என புகழ்பெற்றிருக்கும் மீனாட்சி மருத்துவமனை, மருத்துவ அவசர நிலைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கும் மற்றும் சிகிச்சையளிப்பதற்கும் தொடர்புகொள்ள ஒரு பிரத்யேக உதவி எண் சேவையை (7502506666) தொடங்கியிருக்கிறது. 
           சாலைப் போக்குவரத்து விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக், பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான அவசர நிலைகளை எதிர்கொள்பவர்களுக்கு இச்சேவை பெரும் உதவியாக இருக்கும். 
       தஞ்சாவூர் மாநகரத்தின் துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி ஹெல்ப்லைன் சேவையை தொடங்கி வைத்தார். 
சிறுநீர் பாதையியல் முதுநிலை நிபுணரும் துணை மருத்துவ கண்காணிப்பாளருமான டாக்டர். வி. பிரவீண், இதயவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர்.பி.கேசவமூர்த்தி, கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங் அறிவியல் துறையின் மற்றும் நிபுணர் டாக்டர்.எஸ். சண்முக ஜெயந்தன், நரம்பியல் அறுவைசிகிச்சைத் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். என்.அருண்குமார், விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சைத் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர்.எ.சரவணவேல், எலும்பு முறிவியல் மற்றும் விபத்து சிகிச்சைத்துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர்.கே. பார்த்திபன் மற்றும் நரம்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர்.காமேஷ் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Comments