மாநில உரிமை மீட்பு 2-வது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை அமைச்சர் கணேசன் வரவேற்பு!

மாநில உரிமை மீட்பு 2-வது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சாரப்  பேரணியை அமைச்சர் கணேசன் வரவேற்பு!
திட்டக்குடி, நவ.26-
மாநில உரிமை மீட்பின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரசார பேரணி கடந்த 15-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய நிலையில் நேற்று திட்டக்குடி தொகுதிக்கு வந்தடைந்தது.
    தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில், இருசக்கர பேரணிக்கு உற்சாக வரவேற்றார் அளித்து தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் "மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை" கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரி - திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார்.
    அதன் பேரில் இருசக்கர வாகன பேரணி கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி தொகுதி வருகை புரிந்ததையொட்டி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சரும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் தலைமையில் இளைஞர்களை பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க திட்டக்குடி தொகுதிக்கான பிரசாரத்தை ராமநத்தம் பேருந்து நிலையம் அருகில் இருந்து மாலை அணிவித்து மற்றும் சால்வை அனைத்தும் உற்சாக வரவேற்றனர். 
      அப்போது இருசக்கர வாகனத்தில் அமைச்சர் கணேசன் அமர்ந்து கொண்டு வாகையூர், ஆக்கனூர், பாளையம், இடைச்செருவாய், திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் வழியாக விருத்தாச்சலம் தொகுதி வரை இருசக்கர வாகனத்தில் பின் அமர்ந்துவாரு வாகன பேரணியில் சென்றார்.       
         இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் தங்க நாராயணசாமி,சாதவ், பாரதிராஜா, மதியழகன், முத்துக்குமார், மணிகண்டன், ருக்மணி, ஜெகன்,பிரபு, அன்பழகன் துரைராஜ், ராஜேஷ், மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், சின்னசாமி, விருதாச்சலம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செல்வமணி, திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், துணை அமைப்பாளர்கள் பூமாலை, ராஜா, ராஜராஜசோழன், மங்களூர் வடக்கு இளைஞர் அணி அமைப்பாளர் சங்கர் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments