கடலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம்!
கடலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம்!
நெய்வேலி, அக்.22-கடலூர் மாவட்டம், கடலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை மூலம் மாபெரும் கையெழுத்து இயக்கம் நெய்வேலி என்.எல்.சி. தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து, தொகுதி வாரியாக கையொப்பம் படிவத்தினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இராச வன்னியன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, என்.எல்.சி தொமுச பொதுச் செயலாளர் பாரி, பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதிஷ் குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.