தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக சிப்காட் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக சிப்காட் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டம்!
கடலூர், அக்.11-
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக மாபெரும்  கண்டன முற்றுகைப் ஆர்ப்பாட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடைபெற்றது.
        இந்த மண்ணையும், மக்களையும், நீரையும், கடலையும் நாசமாக்கி, வேலைவாய்ப்பு முழுவதையும் வடவர்களுக்கு தாரை வார்த்து, நமது மக்களுக்கு துரோகம் செய்து வரும் கார்ப்பரேட் கும்பல்களின் கொட்டத்தை அடக்கி, நமது மண்ணையும், மக்களையும் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் கடலூர் சிப்காட் தொழிற்சாலை எதிரில் நடைபெற இருந்தது.
        இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால், திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை எதிரே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன்  கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார்.
             இந்த ஆர்ப்பாட்டத்தில் 
மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தி.திருமால்வளவன், 
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்
கடலூர் மாமன்ற உறுப்பினர் தி. கண்ணன், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன்,
 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் கி.லெனின், சிவக்குமார்,
அறிவழகன், மாவட்ட தலைவர்
சுந்தர் மற்றும் நிர்வாகிகள்
அருள்பாபு, ஜோதி, குமரவேல்,
தயாநிதி, ராமையன்பாலு,
தண்டபாணி, நவீன், கார்த்தி,
சக்திவேல், சுப்புரமணி
ரிச்சர்ட் தேவனாதன், கெஜவாகனன், ஆதிகேசவன், சபா, சுந்தர், சதீஷ், பாலகிருஷ்ணன், சதாசிவம், கிட்டு குமார், வெங்கட், பால்ராஜ், சிலம்பு, சுரேந்தர்,கருணா.மணி, பிரகாஷ், சந்திரன், விக்கி, ராஜேஷ் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
         தொண்டர்கள் வருகை தந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடலூர் பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் நிறுத்தப்பட்டன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை முதல் தேவி ஹோட்டல் வரை வெயில் என்றும் பாராமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்டனர். 
       மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் பணியை மேற்கொண்டனர்.

Comments