சென்னை யானைக்கவுனி போக்குவரத்து காவல்துறை மற்றும் அனுவிரத இயக்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை டைமண்ட்ஸ் இணைந்து நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு! .
சென்னை யானைக்கவுனி போக்குவரத்து காவல்துறை மற்றும் அனுவிரத இயக்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை டைமண்ட்ஸ் இணைந்து நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு!
சென்னை, அக்.07- தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுகின்ற வாகன ஓட்டிகள், பின்புறம் அமர்ந்திருப்பவர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் நிச்சயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுகின்ற இரு சக்கர வாகனம் ஓட்டிகளுக்கும், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதோடு, அவர்களுக்கு அறிவுரை வழங்கியும் வருகின்றனர்.
இத்துடன் சில தொண்டு நிறுவனங்கள் ஹெல்மெட் அணியாமல் வருகிற வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி ஹெல்மெட் அணிவதை ஊக்குவித்து வருகின்றனர்.
இதேபோன்று நேற்று அனுவிரத இயக்கம் தனியார் தொண்டு நிறுவனம், லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை டைமண்ட்ஸ் மற்றும் யானைக்கவுனி போக்குவரத்து காவல்துறையினரும் இணைந்து யானைக்கவுனி காவல் நிலையம் முன்பு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருகின்ற நபர்களுக்கு இலவச ஹெல்மெட் அணிவித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தையும், தலைக்கவசம் உயிரை காக்கும் கவசம் என்றும், அதனை நிச்சயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும், காவல்துறைக்காக அணியாதீர்கள், உங்கள் உயிர்களை பாதுகாப்பதற்காக தலைக்கவசம் அணியுங்கள் என்று வாகனத்தின் முன் அமர்ந்திருப்பவர்களுக்கும், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் இலவச ஹெல்மெட் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், யானைக்கவுனி போக்குவரத்து ஆய்வாளர் ஜாகீர் உசேன், யானைக்கவுனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் மற்றும் அனுவிரத தொண்டு நிறுவனத்தின் தலைவர் லலித் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை டைமண்ட்ஸ் செயலாளர் ராஜ்குமார் மற்றும்
போக்குவரத்து காவல்துறையின் காவலர்கள், தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment